ஒக்கலிகர்[காப்பு] சரித்திரம் இவர்கள் கர்நாடகத்தில் பெரும்பான்மையாகவும், தமிழகத்தில் அதிக அளவிலும், ஆந்திராவில் கணிசமான அளவில் வாழ்கிறார்கள். மேலும் ஒரிசா, மராட்டியம் , சத்திஸ்கர், இலங்கை போன்ற இடங்களிலும் வாழ்கிறார்கள். பயிர்த்தொழில், விவசாயம் போன்றவற்றை பெரும்பாலான மக்கள் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களை கவுண்டர் அல்லது கவுடர் போன்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். காப்பு என்றால் காவல்காரர் என்ற பொருள் கொள்ளப்படுகிறது. இவர்கள் கன்னடம் மொழியினை பேசுபவர்கள் எனினும் இவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்ததால் தமிழ், தெலுங்கு, ஒரியா, மராத்தி போன்ற மொழிகளைத் தாங்கள் வாழும் பகுதிக்கு ஏற்ப பேசி வருகின்றனர். வொக்கலிகர் எனப்படுவோர் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்து தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் சில மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் ஒரு சமூகத்தினரைக் குறிக்கிறது. ஒக்கலிகர், ஒக்கலிகக் கவுண்டர், கவுடர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒக்கலிகர் என்றால் குடியானவன் அல்லது நிலத்தை உழுபவன் என்று பொருள். இவர்கள் தி