Gnagarajngk :::: போகி பண்டிகையில் காப்பு கட்டுவது எதற்காக?
போகி பண்டிகையில் காப்பு கட்டுவது எதற்காக?
🌿 போகி நன்னாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் என்பது வழக்கம். இந்திரனுக்கு போகி என்று வேறு பெயர் உள்ளது. பழங்காலத்தில் இந்திர விழா நடைபெற்ற போது பழைய குப்பைகளைத் தீ மூட்டி வைப்பார்கள்.
🌿 கிராமங்கள் சிலவற்றில் இந்த நாள் காப்பு கட்டும் நாளாக கொண்டாடப்படுகிறது. மாவிலை, வேப்பிலை, பு+லாப்பு+, ஆவாரம்பு+ இவற்றால் காப்பு கட்டி, துணிகளில் முடிந்து தோரணம் போல வீட்டிலும் கோவிலிலும் கட்டி வைப்பது தான் காப்பு கட்டுதல் என்று பெயர். இதனால் தீவைகள் நெருங்காது என்பது ஐதீகம்.
🌿 பண்டிகைக் காலங்களில் வீட்டில் உள்ளவரை நோய் அண்டாமல் இருக்க வேண்டும் என எண்ணி, காப்பு கட்டுதல் எனும் பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது தற்போது போகி என கொண்டாடப்படுகிறது.
🌿 இந்நாளில் மழையால் ஏற்படும் மூட்டைப்பு+ச்சிகளின் தொல்லையின் காரணமாகவும், விஷப்பு+ச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடவும். வீட்டின் முகப்புகளிலும் காப்பு கட்டி தோரணங்களாகத் தொங்கவிடுவர்கள்.
🌿 நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபீளை, தும்பை, துளசி கொண்டு வீட்டின் முகப்புகளிலும், தெருக்களிலும் தோரணங்களாகத் தொங்கவிடுவர்கள். இதனால் நோய் தாக்கும் பு+ச்சிகள் வருவதில்லை.
🌿 தை மாத அறுவடையின்போது புது தானியங்கள் வந்தவுடன் பழைய தானியங்களை வெளியே எடுத்துவிட்டு பு+லாப்பு+, ஆவாரம்பு+, வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை தரையில் பரப்பி அதன் மேல் தானியங்களைக் கொட்டி வைப்பார்கள். இதன் மூலம், புதிய தானியங்கள் கெட்டுப் போகாமல் இருக்க காப்பு கட்டு இயற்கை பு+ச்சி கொல்லிகளாக பாதுகாக்கின்றது.
🌿 பு+ச்சிகள் அண்டாமல் காப்பதால் காப்பு கட்டுதல் என்றாகியது. பழைய தானியங்கள் கழிந்து புது தானியங்கள் வருவதால் பழையன கழிந்து புதியன புகுதல் வருதல் என்றாகியது.
Comments
Post a Comment