.Okkaligar history

ஒக்கலிகர்[காப்பு] சரித்திரம்
      இவர்கள் கர்நாடகத்தில் பெரும்பான்மையாகவும், தமிழகத்தில் அதிக அளவிலும், ஆந்திராவில் கணிசமான அளவில் வாழ்கிறார்கள். மேலும் ஒரிசா, மராட்டியம் , சத்திஸ்கர், இலங்கை போன்ற இடங்களிலும் வாழ்கிறார்கள். பயிர்த்தொழில், விவசாயம் போன்றவற்றை பெரும்பாலான மக்கள் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களை கவுண்டர் அல்லது கவுடர் போன்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். காப்பு என்றால் காவல்காரர் என்ற பொருள் கொள்ளப்படுகிறது.
   இவர்கள் கன்னடம் மொழியினை பேசுபவர்கள் எனினும் இவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்ததால் தமிழ், தெலுங்கு, ஒரியா, மராத்தி போன்ற மொழிகளைத் தாங்கள் வாழும் பகுதிக்கு ஏற்ப பேசி வருகின்றனர்.
    வொக்கலிகர் எனப்படுவோர் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்து தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் சில மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் ஒரு சமூகத்தினரைக் குறிக்கிறது. ஒக்கலிகர், ஒக்கலிகக் கவுண்டர், கவுடர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒக்கலிகர் என்றால் குடியானவன் அல்லது நிலத்தை உழுபவன் என்று பொருள். இவர்கள் திராவிடர் இனக்குழுவைச் சேர்ந்தவர்களாவர். விவசாயத்தைத் தங்களது குலத்தொழிலாக கொண்ட இவர்கள் கன்னடம் மொழியைத் தங்கள் பேச்சு மொழியாகக் கொண்டிருக்கின்றனர்.
ஒக்கலிகர்[காப்பு] இனம்

மொத்த மக்கள்தொகை
          9 கோடி
குறிப்பிடத்க்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
   தமிழ் நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம்,
Language
    தமிழ், கன்னடம், தெலுங்கு
சமயங்கள்
    இந்து சமயம்

தொடர்புள்ள இனக்குழுக்கள்
    திராவிடர் காப்பு

வரலாறு
   காப்பிலியர்கள் துவாபர யுகத்தில் காமதேனுவினுடைய பால் சிவலிங்கத்தின் மீது பட்டு அதிலிருந்து 48 குலங்களாக தோன்றியவர்கள், அக்காலத்தில் இமாலயத்தில் உள்ள சிவலிங்கத்தை காவல் காத்த இனத்தவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இவர்கள் இஷ்வாகு வம்சா வழிகள் இராமாயணம் மற்றும் மகாபாரத காலத்தில் அரச வம்சத்தினராகவும், போர் படை வீரர்களாகவும் இருந்தவர்கள் என்று சிலர் கூறுகின்றனர்.
  இவர்கள் குஞ்சடிகர் என்றும் அழைக்கப்படுகிறார்கள், இதற்கு கிரீக்க மொழியில் குஞ்ச + ட்டி என்றால் ஈட்டியுடைய மனிதன் என்றும் குஞ்ச என்பது அரசரின் தலையில் இருக்கும் கிரீடத்தில் உள்ள வீரத்தின் அடையாளத் தூரிகை என்று பொருள் என்றும் சிலர் சொல்வதுண்டு.
ஒக்கலிகர்கள் இசவாகு வம்ச அல்லது கங்க குல சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகம்.இந்து சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய இவர்கள் முகலாயர்களின் ஆட்சி காலத்தில் இசுலாமிய சமயத்தைத் தழுவ மறுத்தும், இசுலாமியர்களின் படையெடுப்பாலும், மேலும் இசுலாமிய மன்னன் ஒருவன் தங்கள் சமூகப் பெண்ணைத் திருமணம் செய்யக் கேட்டதாலும், அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர் என்று செவிவழிக்கதைகள் கூறுகின்றன. அவ்வாறு கர்நாடக மாநிலப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் பல கிளை சாதிகளாக வொக்கலிகர், வொக்கலிக கவுடா, காப்பிலியக் கவுண்டர், ஒக்கலிகக் கவுண்டர் போன்று பல பிரிவுகளாக ஆனார்கள் என்று மதுரை அரசிதழ்களில் பதிவாகி உள்ளது. இவர்கள் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா, ஹாசன், தும்கூர், சித்ரதுர்கா மற்றும் மைசூர் பகுதிகளிலிருந்து காஞ்சிபுரம் வந்து பின்னர் கோயம்புத்தூர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஒட்டியப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர் என்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பதிவில் பதிவாகி உள்ளது.

சத்திரியர்
  சத்திரியர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் சத்திரியர்கள் பிராமணருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், மநுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, சத்திரியர் பிரிவில் ஆள்வோரும், போர்த்தொழில் புரிவோரும் அடங்குவர். இதிகாசங்களில் வரும், இராமன், கிருஷ்ணன் ஆகியோரும், புத்த சமய நிறுவனரான கௌதம புத்தர், சமண சமயத்தைத் தோற்றுவித்த சத்திரியர் ஆகியோரும் சத்திரியர்களே.

  சத்திரியர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆட்சியுரிமைக்கான தகுதி, போர்த்தொழில், நிலவுடமை ஆகியவற்றைத் தமது நிலைக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர்.
உட்பிரிவுகள்
ஒக்கலிகர் ஜாதிக்குள் 102 உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் சில:
oமொரசு ஒக்கலிகர்
oகுஞ்சடிக ஒக்கலிகர் (காப்பிலியர்)
oரோதாகாரு ஒக்கலிகர்
oஹலிகார் ஒக்கலிகர்
oரெட்டி ஒக்கலிகர் [ஆந்திரா]
oகுடி ஒக்கலிகர்
oக்ராமா ஒக்கலிகர்
oசோழ ஒக்கலிகர்
oகீரைகார ஒக்கலிகர்
oதரப்பாடி ஒக்கலிகர்
oகாப்பு ஒக்கலிகர்
oநம்தாரி ஒக்கலிகர்
oமுசுக்கு ஒக்கலிகர் [முசுகு ரெட்டி]
oநொனப ஒக்கலிகர்
oகோட்டே ஒக்கலிகர்
oஹலாக்கி ஒக்கலிகர்
oஉப்பில கொலகா ஒக்கலிகர்
oதாச ஒக்கலிகர்
oஹொசதேவரு ஒக்கலிகர்
oஜொகி ஒக்கலிகர்
oசெட்டி ஒக்கலிகர்
oகொடவா ஒக்கலிகர்
oகங்கட்கர்/கங்கடிகர் (கங்க சத்ரியா) ஒக்கலிகர்.
oகொடகு ஒக்கலிகர்

பழக்க வழக்கங்கள்
   இவர்கள் சமூகத்தில், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திருமணத்தில் பெண்களுக்கு தாலி அணியும் வழக்கம் இல்லை. ஆனால் கோவை, ஈரோடு மாவட்டங்களில் தாலி அணிகிறார்கள்.
"ஊர்கவுண்டர் நல்லா இருந்தா ஊரு நல்லா இருக்கும்" என்பது இவர்களின் நம்பிக்கை. ஊர் கவுண்டர், நாட்டாமை என அழைக்கப்படும் இவர்களின் தலைவர் இச்சமுதாயத்தின் அனைத்து விழாக்களின் போதும் முன் நிறுத்தப்படுவார். இச்சமூக மக்களின் பிரச்சனை, இச்சமூக மக்களுக்குள் பாகப்பிரிவினை என எந்த பிரச்சனையிலும் அந்தந்த ஊரிலுள்ள இச்சமூகத் தலைவர் யாரும் பாதிக்காதவாறு நடுநிலையான தீர்ப்பு வழங்குவார். இவரின் தீர்ப்புக்கு இச்சமூகத்தினர் கட்டுப்படுகின்றனர்.

தாலி கட்டாத திராவிடர்கள்
   நீலகிரியில் வாழும் மக்களாகிய தொதவர், கோட்டர் என்பவர்கள் திருமணத்தின்போது தாலி கட்டும் வழக்கம் இல்லாதவர்கள். இவர்களோடு அம்மலையில் வாழும் படகரிடமும் தாலிகட்டும் வழக்கம் இல்லை. கோதாவரி மாவட்டத்து மலைகளில் வாழும் கோயில்களும் தாலி கட்டாதவர்கள். கஞ்சம், விசாகப்பட்டினம் மாவட்டங்-களிலுள்ள மலைவாழ் கொண்டர் என்பவரும் இவர்களது கிளையினரான சவரர் என்பவரும் திருமணத்தின்போது தாலி கட்டும் வழக்கம் இல்லாதவர்கள். இவர்களுள் நீலகிரியில் வாழும் கோட்டர் மனைவி, கணவன் இறந்தபின், தான் அதுவரை-யில் அணிந்திருந்த பித்தளைக்காப்பை மங்கல நீக்கத்திற்கு அறிகுறியாக உடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் முதுவர் என்னும் வகுப்பார், சில நூற்றாண்டு-களுக்கு முன் நடைபெற்ற அயலார் படை-யெடுப்பின் போது, மதுரையிலிருந்து இம்மலை நாட்டுப் பகுதிகளுக்கு ஓடிவந்து விட்டதாகக் கூறுவர்.

  இவர்கள் கோவை, மதுரை, மற்றும் மலையாள மாவட்டங்களிலுள்ள மலைகளி-லும், திருவாங்கூர் நாட்டிலுள்ள மலைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடையே திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்கு காதணிகளையும், பித்தளைக் காப்பையும், ஒரு புடைவையையும், சீப்பையும் கொடுப்பது வழக்கம். அவன் இறந்த பிறகு அம்மணமகள், அவனால் கொடுக்கப்பட்டுத் தான் அதுவரை-யில் அணிந்து வந்த காதணிகளையும், பித்தளைக் காப்பையும் நீக்கி விடுதல் இன்றும் இருந்துவரும் வழக்கமாகும். (இக்கால மனைவி வளையலை உடைத்தலும், முதுவர் மனைவி வளையலை நீக்கலும், சங்க காலக் கண்ணகி வளையலை உடைத்தலும், வெளிமான் மனைவியர் வளையலை நீக்கியதும் இங்கு சிந்திக்கத்தக்கன)
கன்னட நாடு
    கன்னட நாட்டிலுள்ள காப்பிலியர், கொரகர், காடு குறும்பர், மொகயர், கார்விகள் முதலிய சாதியாரிடமும் தாலி கட்டும் வழக்கம் இல்லை. கார்வி என்னும் பரதவர் பொன்மணி (தாரைமணி) கழுத்தில் கட்டிப் பெண்ணைப் பந்தலுக்கு அழைத்து வருவர். காப்பிலியர் கரிய கண்ணாடி வளையல்களை அணிகின்றனர்.
படுகர்கள்
    நீலகிரி மலையில் வாழும் 'படுகர்' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான் என்றும், இவர்கள் காப்பு இனத்தின் உட்பிரிவினர்களுள்  ஒருவராக உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.
படுகர் (Badagas அல்லது படகர்) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் ஆவர். படகர்கள் எனும் சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். நீலகிரியில் வாழும் 18 இன மக்களுள் ஓர் இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாதது.

நீலகிரியில் குடியேற்றம்
   படுகர்கள் நீலகிரி மலையில் குடியேறியது ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்பு தான். அதற்கு முன்பு மைசூர் சமவெளிப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் படுகர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் குடியேறியவர்கள் என்றும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் 16ஆம் நூற்றாண்டுக்கும் இடையே குடியேறியதாகவும், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெருமளவில் படுகர்கள் நீலகிரியில் வசிக்க ஆரம்பித்ததாகவும் கருதப்படுகின்றது.

படுகர் இனப் பிரிவுகள்
   நீலகிரியில் வாழும் படகர்களை வடுகர் என்றும் படகர் என்றும் கௌடர் என்றும் கூறுகின்றனர். நீலகிரி படகர் சமுதாயத்தில் 18 பிரிவுகள் உள்ளன. படுகர்களில் உதயா, அருவா, அதிகாரி, கனகா, படகா, டொரிய எனும் பிரிவுகள் உள்ளன
காப்பிலியரின் பிரிவு
' நான்கு பிரிவுகளாக உள்ளனர் '
1.வொக்கலிகர் - விவசாயம் செய்பவர்கள்
2.மூறு பாலயநூறு - மூன்று வளையல் மக்கள்(மூன்று வளைய ஒக்கலிகர்).
3. பொட்டு கட்டொரு - பொட்டு(தாலி) அணிபவர்கள்.
4வெக்குலத்தொடு - போர் தொழில் செய்பவர்கள்.

இடப்பெயர்ச்சி
   தொழில், ஆட்சி மாற்றம், முகலாயர் படையெடுப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் இவர்களில் பல குழுவினர் தாங்கள் அதிகமாக வசித்து வந்த கர்நாடக மாநிலத்திலிருந்து, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வேறு சில இடங்களுக்கும் இடம் பெயர்ந்தனர். தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்தவர்கள் வொக்கலிகர், வொக்கலிக கவுடா, காப்பிலியக் கவுண்டர், ஒக்கலிகக் கவுண்டர் போன்று பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதுபோல் ஆந்திராவிற்குக் குடிபெயர்ந்தோர் அங்கு திலகா, ரெட்டி, காப்பு என்ற பெயரில் வசித்து வருகின்றனர்.

CENTRAL LIST OF OBCs FOR THE STATE OF TAMILNADU
Vokkaligar (including  Vakkaligar Okkaligar,
Kappiliyar, Kappiliya, Okkaliya, Gowda,
Okkaliya Gowda, Okkaliga Gowda, Okkaliya Gowder)
12011/68/93-BCC(C ) dt 10.09.93 , 12011/21/95-BCC dt 15.05.95
12015/15/2008- BCC dt. 16.06.2011

காப்பிலியரின் 48 உட்பிரிவுகள் [கிளை (அல்லது) பெடகு]
       செய்யும் தொழிலை கொண்டு தாங்களுடைய கிளைகளை அக்காலத்தில் வகுத்து கொண்டனர்.
1.பசலேனவரு.                          
2.ஜனகல்லுனவரு.
3.அரசனவரு.
4.ஜலெடனவரு.
5.ராகெனவரு.
6.ஹவினவரு.
7.அட்டேனவரு.
8.ஆலுவனவரு.
9.தான்யாடவரு.
10.எரடுகீரேயவரு.
11.கரடெனவரு.
12.ஹாலனவரு.
13.சூரியனவரு.
14.உண்டேனவரு.
15.எம்மேனவரு.
16.யாரேனவரு.
17.ஹுலியாரு.
18.செட்டேனவரு.
19.கொநேனவரு.
20.அல்பேனவரு.
21.பெல்லேனவரு.
22.அண்டேனவரு.
23.ஜீரிகேனவரு.
24.கட்டாரடவரு.
25.வனமனவரு.
26.காக்கேனவரு.
27.மெனுசேனவரு.
28.கம்பளியவரு.
29.இழையவரு.
30.மைனவரு.
31.அரலேனவரு.
32.கரிகேரு.
33.சாரங்கடவரு.
34.ராவுத்தடவரு.
35.ஹுத்தடவரு.
36.கொடியாவரு.
37.ஜாரியவரு.
38.காலேனவரு.
39.படவனவரு.
40.தசலேனவரு.
41.உருளியெனவரு.
42.அஷ்டேனவரு.
43.சாஷ்ட்ரடவரு.
44.தமகுதியவரு.
45.கொக்கேனவரு.
46.கள்ளேதேவரு.
47.மீஷ்லேனவரு.
48.வொலகள்ளேரரு.

இது தவிர தமிழகத்தில் உள்ள மற்ற கிளைகள்.
1.கள்ளகன்டெயவரு.
2.ஜக்கேலதேவரு.
3.தான்டடவரு.
4.கொட்டகெரினவரு.
5.சாக்குவல்லேரு.
6.கொடெஹல்லியவரு.
7.சௌந்திரியாரு
8.கரவனவரு.
9.ஹுட்டெனவரு.
10.அரமணாரு.
11.நிம்பேனவரு.
12.தேவனவரு.
13.ஹாலகட்டானவரு.
14.உறவினவரு.
15.கன்னசேர்வை.
16.லோக்கனவாரு

மக்களின் இயல்பு மற்றும் வாழ்கைமுறை
    கிளைகளை வைத்து இவர்களுள் உறவுமுறையை வகுத்து உள்ளனர், எனவெ ஒரே கிளை மற்றும் சகோதர கிளைகளில் மணம் முடிப்பது கிடையாது. இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள், இயற்கை, விலங்குகள் மற்றும் பறவைகளுடன் ஒன்றி வாழ்பவர்கள். இவர்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளனர். இவர்களுள் போர்த்தொழில் செய்பவர்கள்,விவசாயம் செய்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் என்று பிரித்துக் கொள்கின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் போர் செய்வதில் திறமைசாலிகள் என்று எட்கர் தர்ஸ்டன் தனது தென் இந்திய குலங்கள் பற்றிய நூலில் தெரிவித்துள்ளார்.

குல தெய்வங்கள்
காப்பிலியர்கள் தங்கள் குலத்தில் பிறந்த பெண்களையேக் குல தெய்வங்களாகக் கொண்டு அவர்களுக்குக் கோயில்கள் அமைத்து வணங்கி வருகின்றனர்.

1.வெள்ளமாலை
2. வீருமாரம்மன்
3. வீருபொம்மக்கா
4.வீருமுத்தம்மா
5. வீருமல்லம்மா
6.சவுடம்மா
7. வீருநாகம்மா
8. வீருகண்ணம்மா
10.சேவியம்மா
11.மதுமுத்தம்மா
12.வீருமாத்தியம்மா
13.எரசிக்கம்மா
14.வீருதம்மா மற்றும் பல

பழமொழிகள்

    காப்பு அனைவரையும் காப்பான் (காவல் செய்வான்) , காப்பு கோட்டைக்கு போக மாட்டன் (அரசரிடம் சென்று முறையிட மாட்டான்), காப்புவைப் போல விவசாயம் செய்ய முடியாது போன்ற பழமொழிகளை ஆந்திரா போன்ற பகுதிகளில் பிற இனத்தவர்களால் அறியபடுகின்றன .

குறிப்பிடத்தக்கவர்கள்

•பேரரசர் கெம்பெ கவுடா
•ஹெச். டி. தேவ கவுடா 14வது இந்தியப் பிரதமர் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996)
•டி.பானுமைய கவுடர் (நிறுவனர்- பானுமையா கலை,அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி - மைசூர்
•வி.கே.கணபதி.B.A.,B.T.,- முன்னாள் தமிழ்நாடு ஒக்கலிகர் மகா ஜனசங்க தலைவர்
•என்.எஸ்.கே.பொன்னையா கவுடர் (முன்னாள் ஒக்கலிகர் ஜாதித்தலைவர் கூடலூர்)
•ர.முத்துராம்கவுடர் (பெரிய நாட்டாண்மைக்காரர், ஒக்கலிகர் ஜாதித்தலைவர் பூதிப்புரம்)
•வி.பி. பாலசுப்பிரமணியன், தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர்
•நீதியரசர் முருகேசன், உயர்நீதிமன்ற நீதிபதி
•டாக்டர் சிவசாமி கவுண்டர் (தலைவர்,தமிழக விவசாயிகள் சங்கம்)
•கவியரசு.நா. காமராசன் (முன்னாள் கதர் வாரிய துணைத்தலைவர் கூடலூர்.)
•ஒ.ஆறுமுகசாமி (விஜயலட்சுமி அறக்கட்டளை கோவை.)

ஒக்கலிகர் கல்வி நிறுவனங்கள்
ஒக்கலிகர் சமுதாயத்தின் / சமுதாயத்தைச் சேர்ந்தவரின் நிர்வாகத்திலுள்ள சில கல்வி நிறுவனங்கள்.

ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெங்களூர்
ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை சரித்திரம்றிவியல் கல்லூரி, கம்பம்
என்.எஸ்.கே.பொன்னையா கவுடர் மேல்நிலைப்பள்ளி, கூடலூர்.
கஸ்தூரிபாய் மேல்நிலைப்பள்ளி,காமயக்கவுண்டன்பட்டி,தேனி.
நஞ்சையன் லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டுப்பாளையம்
ஆதித்யா பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர்
ஸ்ரீ விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிறுமுகை
தி.துரைசாமி கவுடர் மேல்நிலைப்பள்ளி,சீளியூர்,கோவை மாவட்டம்
தாசப்பகவுடர் மாணவர்கள் தர்ம விடுதி, கோபி்செட்டி

Comments

  1. குல தெய்வங்கள்
    வீறுசிக்கம்மாள் என்ற சாமியும் உண்டு

    ReplyDelete
  2. கவியரசு நா.காமராசன் சொந்த ஊர் போடி-மீனாட்சிபுரம்

    ReplyDelete

Post a Comment